ஐ.பி.எல். தொடரில் விராட் கோஹ்லி படைத்துள்ள சாதனை

10 அணிகளுக்கு இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முழுமையாக ஆடி 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி அரைசதம் (51 ரன்கள்) அடித்தார். அவர் 22 ரன் எடுத்த போது நடப்பு தொடரில் 400 ரன்களை கடந்தார். ஐ.பி.எல். சீசன் ஒன்றில் அவர் 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிக முறை 400 ரன்னுக்கு மேல் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா, டேவிட் வார்னர் (தலா 9 முறை) உள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles