பாதாள குழு உறுப்பினர்கள் அறுவர் கைது!

பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 20 பாதுகாப்பு குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பாதாள உலக குழுக்களுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொட்டுகொட, மொரட்டுவை மற்றும் மோதரை ஆகிய பகுதிகளைச் 47, 43 மற்றும் 44 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles