ஐரோப்பிய ஒன்றிய உதவிகள் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்யுங்கள்

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் பெசட்டுக்கும் இடையில் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரான்சிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன் போது, பிரான்சிய தூதுவருடன், தூதரக துணை தலைமை அதிகாரி திருமதி மாரி நொயெல்லா தூரிசும் உடன் இருந்தார்.

இதன் போது, இலங்கைக்கு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் உதவிகள் இலங்கையின் தமிழ் மக்களுக்கும், பின்தங்கிய பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைப்பதை உறுதி படுத்துமாறு மனோ கணேசன் பிரான்சிய தூதுவரை கேட்டு கொண்டார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில், மனோ கணேசன் எம்பி பின்வருமாறு கூறியுள்ளார். “பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் இல்லத்தில் பிரான்சிய விருந்தோம்பல் ஆசாரத்துடன் கூடிய பயனுள்ள சந்திப்பு நிகழ்ந்தது. தெற்கு உலக நாடுகள் தொடர்பில் பங்களிப்புகளை வழங்க பிரான்ஸ் இன்று உறுதியாக இருப்பது என்னை கவருகிறது.

ஜனாதிபதிகள் மெக்ரோன், விக்கிரமசிங்க ஆகியோர் மத்தியிலான பேச்சுவார்த்தைகளின் பின் இலங்கைக்கு சமுத்திரதுறை தொடர்பில் உதவ பிரான்ஸ் ஆர்வம் கொண்டு உள்ளதாக தூதுவர் மற்றும் தூதரக துணை தலைமை அதிகாரி ஆகியோர் என்னிடம் கூறினர்.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் உதவிகள் இலங்கையில் தமிழ் மக்களுக்கும், பின்தங்கிய பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைப்பதை உறுதி படுத்துமாறு நான் கோரினேன். நமது மக்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டங்களை முன்மொழிந்து முன்னெடுப்பது தொடர்பில் தொடர்ந்து பேச்சுகள் நடத்துவது பற்றியும் கலந்துரையாடினோம்.”

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles