முதலிடத்துக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வௌியிடப்பட்ட டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியாவை பின்தள்ளி அவுஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

2021 மே மாதம் முதல் 2023 மே மாதம் வரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையிலேயே இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் இந்தியாவும் மூன்றாமிடத்தில் இங்கிலாந்தும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை அணி ஏழாவது இடத்தில் உள்ளது.

இருப்பினும், ஒரு நாள் மற்றும் சர்வதேச T20 போட்டிகளுக்கான தரவரிசைகளில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

Related Articles

Latest Articles