போர் குறித்து புத்தகம் எழுதுகிறார் பொன்சேகா

இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பில் இறுதிக்கட்ட சமரை வழிநடத்திய முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா புத்தகமொன்றை எழுதிவருகின்றார் என தெரியவருகின்றது.

“உண்மையான யுத்தம்” எனும் தலைப்பின்கீழேயே அவரின் புத்தகம் வெளிவரவுள்ளது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இப்புத்தகத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக செயற்பட்டாலும் அக்கட்சியால் பொன்சேகா ஓரங்கட்டப்பட்டுள்ளார். எனவே, இந்த புத்தகம் வெளியான பின்னர் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை பொன்சேகா எடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles