ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணையமுடியும் – என்று மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மொட்டு கட்சியின் சலூன் கதவு திறந்தே உள்ளது, எவரும் உள்ளே வரலாம், வெளியே போகலாம். ஐக்கிய தேசியக் கட்சி அல்ல இலங்கையில் உள்ள எந்த கட்சி வேண்டுமானாலும் எம்முடன் கூட்டணி வைக்கலாம். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகூட இணையலாம். எமது கட்சியின் கொள்கையை ஏற்று எவர் வந்தாலும் எமக்கு பிரச்சினை அல்ல.” – என்றார் எஸ்.எம். சந்திரசேன.
