போதைப்பொருட்களுடன் பதுளையில் எழுவர் கைது!

பதுளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் பதுளை நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 6040 மில்லிகிராம் ஹெரோயின், 50 போதை மாத்திரைகள் மற்றும் 1000 மில்லிகிராம் கஞ்சாவுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பதுளை நகர் , மஹியங்கன வீதி பிடவெலகம, சிங்கபுர, ஒலிமண்டிய மற்றும் எகொடவெல ஆகிய பகுதிகளில் வசிக்கும் 28, 46, 40, 21, 41 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles