ரத்தொலுகம பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரத்தொலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரத்தொழுகம பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்த குளவி கூடு கலைந்து அப்பகுதியில் இருந்தவர்கள்மீது தாக்குதுல் நடத்தியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட குறித்த நபரும், இரு பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.










