ரணில், தம்மிக்க பெரேரா அல்ல மொட்டு கட்சியில் இருந்து எந்த கொம்பன் களமிறக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் – என்று அடித்து கூறியுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின் நிறைவேற்று பணிப்பாளரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரோ,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எமக்கு முக்கியம் அல்ல. ரணில், தம்மிக்க பெரேரா, கமல் என எவர் வந்தாலும் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார்கள்.” -என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தியிடம் நாட்டு மக்கள் ஆட்சியை கையளிக்க கூடாது எனவும், அவ்வாறு செய்ய முற்பட்டதால் அது ஆபத்தாகவே அமையும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.










