நாட்டில் பல பகுதிகளில் இன்று அடை மழை!

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று(15) 100 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டை அண்மித்து ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலைமை தீவிரமடைவதன் இதற்கு காரணமாகும்.

இதனிடையே, மழையுடனான வானிலை காரணமாக 4 மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(15) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles