சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (16) மாலை 6 மணியளவில் தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல வெல்லவாய வீதி இன்று (17) காலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கரந்தகொல்ல மலித்தகொல்லவில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் பயணிக்கும் பயணிகள் விசேட அவதானத்துடன் பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் பயணிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.ஈ.எல்.எம்.உதயகுமார கேட்டுக் கொண்டார்.
இப்பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக எந்த நேரத்திலும் இந்த வீதியை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும் என உதவிப் பணிப்பாளர் திரு.உதயகுமார மேலும் தெரிவித்தார்.
ராமு தனராஜா










