உயிரிழந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாகப் போலி ஆவணம் தயாரித்து வழங்கியதாகக் கூறப்படும் கிராம சேவகர், ஒருவர் களுத்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, தேக்கவத்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றும் கிராம சேவகர் ஒருவரே கைதானவராவார். இவர் வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாகப் போலி ஆவணம் தயாரித்து பள்ளிவாசலுக்கு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து இந்தப் போலி ஆவணத்தை எடுத்துச் சென்ற பெண் ஒருவர், இந்த ஆவணத்தைப் பயன்படுத்தி வேறு ஒருவருக்குச் சொந்தமான காணிக்கு போலி உறுதி தயாரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இப் பெண்ணை தனக்குத் தெரியாதெனவும் அவர் கேட்டதையடுத்து இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
