ஒற்றையாட்சியை, தேசியத்துவத்தை பாதுகாக்கக்கூடிய வேட்பாளரை தெரிவுசெய்வதற்கான சக்தியுள்ள – முதுகெலும்புள்ள அரசியல் கட்சிதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும் – அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற திசையை நோக்கியா மொட்டு கட்சி பயணித்துக்கொண்டிருக்கின்றது.” – என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே நாமல் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நான் அவ்வாறு கருதவில்லை. மொட்டு கட்சியென்பது சுயாதீனக் கட்சியாகும். எமது கட்சியின் கொள்கையை பாதுகாக்ககூடிய வகையில், ஒற்றையாட்சி மற்றும் கட்சி முகாமை பாதுகாக்ககூடிய வகையில், தேசியத்துவத்தை பாதுகாக்ககூடிய வேட்பாளரை தெரிவுசெய்யக்கூடிய முதுகெலும்புள்ள கட்சி, அரசியல் இயக்கம்தான் எமது கட்சியாகும்.
எனவே, குழுவாக இது விடயத்தில் மாறுபட்ட கருத்துகள் கருக்கலாம். கலந்துரையாடல்மூலம் இணக்கப்பாடு எட்டப்படும். கட்சி ஆதரவாளர்களுடனும் ஆலோசனை பெறப்பட்டுவருகின்றது. அந்தவகையில் பொருத்தமான வேட்பாளரை தெரிவுசெய்வோம்.
நாட்டுக்காக எவருடனும் இணைந்து செயற்படவும் தயார், விலகி செல்லவும் தயார்.
ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளாரா என்பதை ரணில் விக்கிரமசிங்க முதலில் தெரியப்படுத்த வேண்டும்.” -என்றார்.
