நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் மேலும் சில தரப்புகள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், அக்கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் ஜுன் 06 ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா தரப்பு, அரநு பிரியதர்சன யாப்பா அணி, சுனில் பிரேமஜயந்த அணி என்பனவே புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
“முற்போக்கான அரசியல் கூட்டணி உதயமாகும். அம்பாந்தோட்டையில் அடுத்த மாதம் கூட்டணி இதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்படும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
புதிய கூட்டணியில் உள்ளவர்கள ; ரணில் விக்கிரமசிங்கவுக்கு சார்பாகவே செயற்பட்டுவருகின்றனர். எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கான மெகா கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியே இடம்பெறுகின்றது என அறியமுடிகின்றது.
கூட்டத்துக்குரிய ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
