அடுத்த மாதம் முதல் அனல் கக்கும் அரசியல் களம்!

மே தினக் கூட்டத்துக்கு பிறகு, ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஆரம்பக்கட்ட கூட்டங்களை எதிர்வரும் ஜுன் மாதம் முதல் மிகவும் பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் பிரதான அரசியல் கட்சிகள் பிரமாணடமாக நடத்தி இருந்தன. பெருமளவான மக்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்த பிரசாரக் கூட்டங்கள் ஜுன் மாதம் முதல் நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் மக்கள் சந்திப்பு, ஜுன் 8 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்குரிய அதிகாரப்பூர்வ பிரசாரக் கூட்டமாக இது அமையும் எனக் கருதப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பனவும் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதேவேளை, உத்தர லங்கா சபாகயவின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜுன் மாதமே பெயரிடப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles