தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுடன் சங்கமம்?

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுடன் இணையாது என்று அக்கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது சிறுபான்மையினக் கட்சிகள் சஜித்துக்கே ஆதரவு வழங்கும் எனவும், சஜித்தே அத்தேர்தலில் வெற்றிபெறுவார் எனவும் பழனி திகாம்பரம் கூறினார்.

“ ரணிலும், சஜித்தும் இணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள ஓரிருவர் கூறுகின்றனர். அவர்கள் அவ்வாறு கூறினாலும் கட்சியை விட்டு செல்லமாட்டார்கள். எனினும், பலர் ஐதேக பக்கம் செல்லவுள்ளனர் என போலி தகவல்கள் பரப்பப்படுகின்றன.

நானோ, மனோ கணேசனோ அல்லது இராதாகிருஷ்ணனோ அரசு பக்கம் செல்லமாட்டோம். ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டவர்களும் செல்லமாட்டார்கள்.” – எனவும் திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles