தேர்தலை நடத்துவதில் ஜனாதிபதி உறுதி

மக்கள் ஆணையுடனேயே ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். எனவே, தேர்தல் நிச்சயம் நடைபெறும் – என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

“தேர்தலொன்று அவசியமில்லை, தற்போதைய ஜனாதிபதியே பதவியில் தொடர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளாரே…” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அவ்வாறு இல்லை, தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் ஆசியுடன் வெற்றிபெறுவதையே ஜனாதிபதி விரும்புகின்றார். தேர்தலில் போட்டியிடவுள்ளதை அடுத்த வாரமளவில் அவரே அறிவிப்பார். ஜனாதிபதி தேர்தலில் அவர் களமிறங்குவதும், வெற்றி பெறுவதும் உறுதி.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் வருவார்கள். அதற்கான நேரம் வரும். அதுவரை காத்திருப்போம்.” – என்றார்.

Related Articles

Latest Articles