சுயாதீன விசாரணை கோரும் ஜீவன்!

நானு ஓயா உடரதல்ல தோட்டம் மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்ஸிடம் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர் மற்றும் மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் பொது செயலாளர் என்ற வகையிலும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளேன் என அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொறுப்புள்ள ஊழியர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வகையில் இது எனது கடமை என நான் கருதுவதால், இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

குறித்த சம்பவங்கள் நடந்த நேரத்தில் நடந்தவற்றின் உண்மைத் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, பொறுப்புள்ள அனைத்து நபர்களும் பொறுப்புக் கூற வேண்டியது அவசியம் என்றும் நான் நம்புவதாக அமைச்சரிடம் மேலும் தெரிவித்துள்ளேன்.

மேலும் அத்தகைய விசாரணையானது, நமது அரசு மற்றும் சமூகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளை வலுப்படுத்துவது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரியுள்ளேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆ.ரமேஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles