“ கடலில் புயலில் சிக்கிய இலங்கை எனும் கப்பலை மீட்க எந்த கெப்டனும் முன்வராத நிலையில், ரணில் விக்ரமசிங்க என்ற கெப்டன் கப்பலை கைப்பற்றி பாதுகாப்பாக துறைமுகத்திற்கு கொண்டு வர முடிந்தது. இப்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் கடலில் இறங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. அந்த கப்பலின் கெப்டன் பதவியை ரணில் விக்ரமசிங்கவிடம் திரும்ப ஒப்படைக்க உங்களால் முடியும். நன்றிக் கடன் செலுத்த நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.”
இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
“ அடுத்த ஐந்தாண்டுகளை அவர்களுக்கு கொடுத்துப் பார்க்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இதற்காக உங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினால் இந்த நாடு மீண்டும் அழிவடைவதைத் தடுக்க முடியாது.
இந்த நாட்டைக் காப்பாற்றக்கூடிய தலைவரையும் அழிக்கக்கூடிய தலைவரையும் இந்த நாட்டு மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். எனவே, மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு வேறு மாற்றீடான பெயர்கள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு வேறு மாற்றுவழியில்லை. ஒரே மாற்றுவழி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. எனவே அடுத்த 05 வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டை ஒப்படைக்கும் பொறுப்பு உங்கள் கரங்களிலே உள்ளது. “ – என்றார்.
