அதிபர், ஆசிரியர்களின் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் காரணமாக மலையக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
அத்துடன், பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. அதிபர் ,ஆசிரியர்கள் இன்மையால் அவ்வாறு வந்த சில மாணவர்களும் திருப்பி அனுப்பட்டனர்.
தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதால் அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ். சதீஸ்










