நுவரெலியாவிலிருந்துதிருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதிசொகுசு தனியார் பஸ் பாதையை விட்டு விலகியே அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.
நுவரெலியா கிரேன் ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










