உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 92 ஆயிரத்து 610 ஆக அதிகரித்து உள்ளது. அத்துடன், கொரோனாவால் அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,92,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 80 லட்சத்து 37 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 லட்சத்து 86 ஆயிரத்து 839 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,15,991 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்றால் மேலும் 958 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,40,101 ஆக உயர்ந்து உள்ளது.
பிரேசிலில் ஒரே நாளில் 39,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 19,70,909 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனா தொற்றால் 1,261 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 75,523 ஆக உயர்ந்து உள்ளது.










