உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகளுக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை: சொத்துகள் பறிமுதல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 15 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு, 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது.

முதல் குற்றவாளியான முகமட் இப்ராஹிம் முகமட் நௌபர் என்ற நௌபர் மௌலவிக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 240 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆறாவது மற்றும் ஏழாவது குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எட்டாவது குற்றவாளிக்கு 260 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒன்பதாவது மற்றும் பத்தாவது குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 220 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பதினோராவது மற்றும் பதினைந்தாவது குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 200 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பதினாறாவது மற்றும் பதினெட்டாவது குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 220 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பத்தொன்பதாவது குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதிகள் நவரத்ன மராசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை நேற்றிரவு வழங்கியது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட 15 பிரதிவாதிகள் அனைவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

269 பேர் உயிரிழந்த மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் இந்தத் தீர்ப்பு இறுதித் தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் –

1. முகமட் இப்ராஹிம் முகமட் நௌபர் என்ற நௌபர் மௌலவி

2. முகமட் சரிபு ஆதம் லெப்பை அல்லது கபூர் மாமா

3. ஹயாத்து முகமட் அஹமட் மில்ஹான்

4. முகமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா

5. முகமட் இப்ராஹிம் ஹபீஸ் அப்துல் ஹக்

6. முகமட் அன்வர் முகமட் ரிஸ்கான்

7. முகமட் மன்சூர் முகமட் சனாஸ்டீன்

8. அப்துல் மனாப் முகமட் பிர்தௌஸ்

9. முகமட் ரமீஸ் முகமட் சாஜித்

10. அப்துல் லதீவ் மொகமட் சாபி

11. ஹுசைனுல் ரிஸ்வி காலித் சமீர்

12. முகமட் ஹனிபா ஜைனுல் ஆப்தீன்

13. மொகமட் முஸ்தபா மொகமட் ஹரிஸ்

14. ராசிக் ராசா ஹுசைன்

15. கச்சி முகமட் முகமட் ஜெம்சித்

Related Articles

Latest Articles