இலங்கை இந்திய நட்புறவு வளைவு அங்குரார்ப்பணம்!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆதரவுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து 2024 ஆகஸ்ட் 8 ஆம் திகதி கோட்டே ஶ்ரீ ஜயவர்த்தனபுர தேசிய சந்தன மர பூங்காவில் இலங்கை இந்திய நட்புறவு வளைவினை அங்குரார்ப்பணம் செய்துள்ளன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன , இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுடன் இணைந்து இலங்கை இந்திய நட்புறவு வளைவினை திறந்துவைத்த நிலையில் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பதவிதாரிகளான பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், கலாநிதி வே. இராதாகிருஸ்ணன், ஜகத் குமார சுமித்ராஆராய்ச்சி மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இத்தேசிய சந்தன மர பூங்காவில் பூ மருதம் மரக் கன்றுகளை வளைவு வடிவிலான ஒழுங்கில் நாட்டிவைத்தனர்.

சுற்றுச்சூழலுக்கான உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில் 2024 உலக சுற்றாடல் தினத்தன்று பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட #Plant4Mother திட்டத்தின் அங்கமாக இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது. அதனை முன்னிட்டு புது டில்லியில் உள்ள புத்த ஜயந்தி பூங்காவில் 2024 ஜூன் 05 ஆம் திகதி அன்று அரச மரக்கன்று ஒன்றினை நாட்டி பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இத்திட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும், அதேநேரம் வெளிநாடுகளில் உள்ளவர்களும் இணையவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். முழுமையான அரசாங்கம் மற்றும் முழுமையனா சமூகம் அணுகுமுறையினை பின்பற்றி இந்தியாவில் 2024 செப்டெம்பர் மாதத்திற்குள் 800 மில்லியன் மரங்களை நாட்டுவதற்கும் 2025 மார்ச்சிற்குள் 1.4 பில்லியன் மரங்களை நாட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய நட்புறவு வளைவினை அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான நட்புறவிற்கான ஒரு சான்றாக அமைகின்றது. ஸ்திரமான பொருளாதார அபிவிருத்தி மற்றும் பரஸ்பரம் நன்மைதரக் கூடிய இருதரப்பு பங்குடைமையினை மேம்படுத்துதல் மற்றும் ஆழமாக்குதல் ஆகியவற்றுக்கான பொதுவான இலக்கினையும் இது குறித்து நிற்கின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles