பொருளாதார சமரை வெற்றிகொள்ள அரச ஊழியர்களும் ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும்!

நாட்டை மீட்பதற்குரிய பொருளாதாரப் போரில் அரசாங்க ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. எனவே, எதிரணிகளின் போலியான எண்கணித வார்த்தைகளுக்கு மயங்கி வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை அரசாங்க ஊழியர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் எமது நாட்டை கடவுளால்கூட காப்பாற்ற முடியாமல்போய்விடும் என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

நெருக்கடியான காலகட்டத்தில்கூட அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகளை வழங்கி, 2025 ஆம் ஆண்டு முதல் நிலையான சம்பள உயர்வு திட்டத்தை முன்வைத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டமே நடைமுறைக்கு சாத்தியம் என்பதை அரசாங்க ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

“கிறீஸ் உட்பட பொருளாதாரம் வங்குரோத்து அடைந்த நாடுகளில் செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் அரசாங்க துறைகளில்தான் கைவைக்கப்பட்டது. குறிப்பாக அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டது. கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செயற்படவில்லை. மலரில் இருந்து வண்டு தேன் எடுப்பதுபோல, அரசாங்க ஊழியர்களுக்கு வலி, சுமை ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அடுத்த வருடம் முதல் சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்பதையும் விளக்கியுள்ளார்.

இந்நிலையில் அரசாங்க ஊழியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக போலியான வாக்குறுதிகளை எதிரணி ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்கியுள்ளனர். அதை வழங்குவோம், இதை வழங்குவோம் என நடைமுறைக்கு சாத்தியமற்ற பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர். இதை நம்பி அரசாங்க ஊழியர்கள் வாக்களித்தால், நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லும். தற்போது பெரும் சம்பளம் 50 வீதத்தால் குறையும்.

எனவே, நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாட்டின் நலன்கருதி மேலும் ஐந்தாண்டுகள் வழங்கும் வகையில் தமது வாக்குரிமையை அரச ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும்.

88,89 காலப்பகுதியில் சிவப்பு தோழர்களால் அரசாங்க துறைக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்பு பலருக்கு நினைவிருக்கும். அதேபோல நிலாச்சோறு ஊட்டுவதுபோல சஜித் பிரேமதாசவும், அரசாங்க ஊழியர்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதற்கு போலி உறுதிமொழிகளை வழங்கிவருகின்றார். இவர்களுக்கு தமது வாக்குமூலம் அரசாங்க ஊழியர்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.” – என்றார் வேலுகுமார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles