குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்ட தொழிலாளி பலி: ஹப்புத்தளையில் சோகம்

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை தங்கமயலை தோட்டத்தை சேர்ந்த 56 வயதுடைய மாரிமுத்து மகேஷ்வரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ஹப்புத்தளை , தங்கமயலை தேயிலை தோட்டத்தில் நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் குளவி தாக்குதலுக்கு இலக்கான நிலையில் ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ வைத்தியசாலையில் மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles