ரணிலின் சேவை நாட்டுக்கு தேவை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சேவை இந்நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது தனி ஒரு ஆளாக சவாலை ஏற்றவர்தான் ரணில் விக்கிரமசிங்க. அவர் அன்று சவாலை ஏற்றதால்தான் மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை ஆள்வதற்குரிய அனுபவம் குறைவு. எனவே, நாட்டை சரியாக வழிநடத்த முடியாமல் பொருளாதாரம் மீண்டும் சரிந்தால், அந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இந்நாட்டுக்கு தேவை.” – என்றார்.

Related Articles

Latest Articles