இரட்டைக்கொலை: மூன்றாவது சந்தேகநபரும் கைது

யாழ். வடமராட்சி, பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இரட்டைக் கொலைகளுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், 2019ஆம் ஆண்டு குடத்தனையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

கற்கோவளம் ஜே/406 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்துவந்த மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 54) என்ற சலவைத் தொழிலாளியும், அவரது மனைவியான மேரி றீற்ரா (வயது 53) என்பவரும் சித்திரவதை செய்யப்பட்டு கல்லால் குத்திக் கொல்லப்பட்டிருந்தனர்.

பிரதான சந்தேகநபர்களாக மூவர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதீத குடிவெறி மற்றும் தொழில் போட்டியால் பழிவாங்கும் குரோத உணர்வு என்பவற்றாலேயே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles