அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்படமாட்டாது, அது தொடர்ந்து வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
குறித்த நிவாரண திட்டத்தின் பெயரைக்கூட மாற்றும் எண்ணம் இல்லை எனவும், கொடுப்பனவு வழங்கலின்போது அநீதி இழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேன்முறையீடு செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
அத்துடன், வங்கிக் கணக்கு இல்லாததால் ஒரு தரப்பினருக்கு அஸ்வெசும கிடைப்பதில்லை, வங்கிக் கணக்கை திறப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லை. அந்த பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.










