“மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.” என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
அமைச்சராக பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக தமிழ் மக்கள் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருகைதந்து 200 வருடங்களாகின்றன. முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்கின்றனர்.
பெருந்தோட்டப்பகுதிகளை எடுத்துக்கொண்டால் அங்கு வாழ்பவர்களுக்கு வீடு இல்லை, காணி இல்லை, நியாயமான சம்பளம் இல்லை.
பெருந்தோட்டங்கள் தொண்டமான், திகாம்பரம் தரப்புகளின் இராஜதானிகளாக இருந்த இடங்கள். எனவே, பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கு நாம் தயார்.” -என்றார்.
