மனோவுக்கு தேசியப் பட்டியல் வழங்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கி கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்க வேண்டும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார் என்று செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொழும்பு மாவட்டத்தில் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன், தலைநகர் கொழும்பில் மூன்று தமிழ் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வாய்ப்பிருந்தும் ஒருவர்கூட தெரிவாகவில்லை.

கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் என்பது காலத்தில் கட்டாயமாகும். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொழும்பில் வாழ்கின்றனர். அவர்களுக்கு கட்டாயம் தமிழ் பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் தலைநகரில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இம்முறை இப்பிரதிநிதித்துவத்தை கொழும்பு வாழ் தமிழ் மக்கள் இழந்துள்ளனர்.

இ.தொ.கா மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு இடையில் கொள்கை ரீதியான மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும், தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதில் இ.தொ.கா உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலையிலேயே உள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேலதிகமாக 2 ஆசனங்களை பெறக்கூடிய நிலையில், தேர்தலில் வெற்றிப் பெற போவதில்லை என அறிந்தும் பல்வேறு தமிழ் சுயேட்சை குழுக்கள் தமிழ் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் களமிறக்கப்பட்டன. இதனூடாக கடந்த காலங்களில் மக்களுக்காக பல்வேறு சேவைவைகளை முன்னெடுத்த மருதப்பாண்டி ராமேஸ்வரன் சொற்ப சில நூறு வாக்கு குறைவால் பாராளுமன்றம் தெரிவு செய்வதற்கு தடையாக அமைந்தது.

அதனை தொடர்ந்து அதற்கு அடுத்தப்படியாக இருக்கும் சக்திவேலுக்கும் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு இழக்கப்பட்டது. இவர்கள் இருவரைவிட குறைந்த வாக்குகளை பெற்ற சிலர் இன்று பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் ஏனைய கட்சிகளை விட ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் மனோ கணேசன் அதிக தமிழ் வாக்குகளை பெற்றுள்ளார். அதற்கு காரணம் அவர் கடந்த காலங்களில் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுத்த சேவைகள்.அதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமிழர் ஒருவருக்கு தேசிய பட்டியல் வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது.

கொழும்பில் தமிழ் வேட்பாளர்களில் அதிகப்படியான வாக்குகளை பெற்று, கடந்த காலங்களில் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு மனோகணேசனுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கி கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்க வேண்டும்.” – எனவும் கூறியுள்ளார் செந்தில் தொண்டமான்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles