பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
” தேசிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.
மேலும் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக பாராளுமன்றத்திலும், தனது அமைச்சினூடாகவும் அதிக கரிசனைக்காட்டி நில உரிமையினை பெற்றுக்கொடுக்க முக்கியத்துவம் வழங்குவார் என நம்புகின்றேன்.” – எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.