பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முன்னுரிமை வழங்க வேண்டும்!

அரசமைப்பு விவகாரத்தைவிடவும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘மக்கள் பிரதிநிதி, மக்கள் மற்றும் தேர்தல் தொகுதிக்கு பொறுப்பக்கூறக்கூடிய வகையில் தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும். செனட் சபை உருவாக்கப்பட வேண்டும். இவ்விரு விடயங்களை செய்வதற்குரிய அரசமைப்பு மறுசீரமைப்பு யோசனையை நான் முன்வைத்துள்ளேன்.
இதனை செய்யாவிடின், புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புதிய அரசமைப்புக்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தேவை. அது தொடர்பில் மக்களுக்கு யோசனைகளை முன்வைப்பதற்கு மேலும் ஒரு ஆண்டு தேவை. நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துக்கு அப்பால் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.
புதிய அரசமைப்பு இயற்றப்படும் என அரசாங்கம் கூறி இருந்தாலும் எந்த கொள்கையின் அடிப்படையில் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தற்போதும் அமுலில் உள்ளது. இதற்கு புதிதாக சட்டம் இயற்ற வேண்டியதில்லை.
அரசமைப்பு மறுசீரமைப்பைவிடவும் பொருளாதாரம் பற்றி தற்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நாடாளுமன்றத்தை நடத்துவதுகூட சிக்கலாகமாறும்.” – என்றார்.
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles