எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதான இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஒரு படகில் வந்த 18 இந்திய மீனவர்கள் நேற்று (03) அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி 18 இந்திய மீனவர்களும் யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்றுப் பிற்பகல் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிவான் கிருசாந்தன் பொன்னுத்துரை மீனவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.










