ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி டில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்தியாவில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இந்திய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார் எனவும், வர்த்தக சமூகத்தினருடனும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும் ஜனாதிபதியுடன் டில்லி செல்லவுள்ளனர். மீனவர் பிரச்சினை சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
