கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் – வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தனது தாயாரை நேற்று பிற்பகலில் இருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்ற வேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடிப் பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்த நிலையில் அந்தக் கிணற்றை அவரது மகன் எட்டிப் பார்த்த வேளை சடலம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாகக் காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய தாயார் ஆவார்.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles