உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்த பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது.
வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இதற்குரிய சட்டரீதியிலான நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை உள்ளாட்சிசபைத் தேர்தலை தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்துவதற்கும் அரசு தீர்மானம் எடுத்துள்ளது.
