தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எம் பொறுப்பு

“இலங்கைக்குள் இனவாதம் என்ற சொல்லை உச்சரிக்காத அளவுக்கு  உங்களின் (தமிழ் மக்களின்) செயற்பாடுகள் அமைந்துள்ளதால் உங்களின்  எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எங்களின் பொறுப்பாகும். இதேபோன்றுதான் முழு இலங்கையும் எமது புதிய அரசாங்கம மீது பாரிய எதிர்பார்ப்பில் இருக்கின்ற நிலைமையில் அதனை மறந்து நாம் செயற்படப்போவதில்லை.”

– இவ்வாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனெவி யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.

யாழ். தெல்லிப்பழையில் நேற்று நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் புதியதொரு மாற்றம் வேண்டுமென அனைத்து மக்களும் எமக்கு ஆதரவை வழங்கியிருக்கின்றனர். அத்தகைய மாற்றத்தின் பின்னர் முழு இலங்கையும் பாரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது.

குறிப்பாக இங்குள்ள மக்கள் அனைவரும் கடந்த தேர்தலில் எங்களுக்கு வழங்கிய ஆதரவை நாங்கள் மறந்து செயற்பட முடியாது. இந்தப் புதிய அரசாங்கம் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக எமக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.

அவ்வாறு நாடு முழுவதும் பாரிய மக்கள் ஆணையோடு நாம் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். அதிலும் யாழ்ப்பாணத்தில் கூட எமது கட்சியில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் தெரிவு செய்துள்ளீர்கள்.

அதனூடாக நீங்கள் அனைவரும் மீண்டுமொரு தடவை இலங்கைக்குள் இனவாதம் என்ற சொல்லை உச்சரிக்காத அளவுக்கு எம்மை அழைத்துள்ளீர்கள்.

ஆகையினால் கௌரவமான வாழ்வுக்கான உங்களின் எதிர்பார்ப்பைப் பாதுகாப்பதும் அதற்காகப் பணியாற்றுவதும் எமது பொறுப்பாகும்.

அத்தகைய பொறுப்பை மறந்து நாங்கள் செயற்படப் போவதில்லை. உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலையே எமது செயற்பாடுகள் அமையும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles