தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது எனவும், கூட்டுறவு தேர்தல் முடிவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன எனவும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்னச யாப்பா தெரிவித்தார்.
” எதிர்வரும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் எமது கூட்டணி கதிரை சின்னத்தில் களமிறங்கும். அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம்.
எமது நாட்டில் அரசியல் பிரச்சினை இல்லை, பொருளாதாரப் பிரச்சினையே உள்ளது. அப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதிலேயே அரசாங்கத்தின் இருப்பு தங்கியுள்ளது.
கூட்டுறவு தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தோற்றுவருகின்றது. அதாவது தேசிய மக்கள் சக்திக்குரிய மக்கள் செல்வாக்கு குறைந்துள்ளது.” – என்றார்.
