யாழ்ப்பாணம், அரியாலை – மாம்பழம் சந்தி அருகில் இன்று பிற்பகல் டிப்பர் வாகனம் மோதியதில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சைக்கிளில் வீதியால் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
