முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஆச்சி என அறியப்படும் டெய்சி பொரெஸ்ட் (டெய்சி ஆச்சி) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றவேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட டெய்சி பொரெஸ்ட் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதி மோசடி விவகாரம் தொடர்பில் யோசித மற்றும் அவரது பாட்டியிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










