பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையில் 115 எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
அதேவேளை, பொலிஸ்மா அதிபரை பதவி நீக்குவதற்குரிய பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று தெரிவித்தார்.
