இறம்பொடை , கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய குறித்த பஸ் விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 40 பேர் நாவலப்பிட்டி, கம்பளை, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளிலும் பேராதனை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
