கேகாலை மாவட்டத்தில் கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று மாலைவரை (19ஆம் திகதி) 533 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (19ஆம் திகதி) மாத்திரம் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் மொத்தமாக 3,527 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாவனல்லையில் 45 பேரும், கேகாலையில் 34 பேரும், வரக்காபொலையில் 45பேரும், ருவன்வெல்லையில் 52பேரும், தெஹியோவிட்டயில் 138பேரும், அரனாயக்கவில் 30பேரும், புலத்கோஹ{பிட்டியவில் 50பேரும், எட்டியாந்தோட்டையில் 38பேரும், கலிகமுவயில் 37பேரும், ரம்புக்கணையில் 42பேரும், தெரணியகலையில் 22 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
533 தொற்றாளர்களில் 369 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,227 ஆக இருந்ததாகவும் தற்போது 3527பேர் தனிமைப்படுத்தலில் இருக்க ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயம் தகவல் வெளியிட்டுள்ளது.
