அக்கரபத்தனை பிரதேச சபை தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவரிடம் கடந்த 16 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர், சுய தனிமையில் இருக்காமல் இவர் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
