படகு மூழ்கி 68 அகதிகள் பலி!

ஏமன் அருகே படகு மூழ்கியதில் அகதிகள் 68 பேர் உயிரிழந்தனர். மேலும், 74 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஏமனில் உள்ள அப்யான் மாகாணத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் புலம் பெயர்ந்தோர் 154 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் மீட்பு பணியில், தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், தண்ணீரில் மூழ்கி 68 அகதிகள் உயிரிழந்தனர். மேலும் 74 பேர் மாயமாகி உள்ளனர்.

இதுவரை 10 பேர் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் எத்தியோப்பிய நாட்டினர். ஒருவர் ஏமன் நாட்டவர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆப்பிரிக்காவின் கொம்புக்கும் ஏமனுக்கும் இடையிலான கடல் பாதையின் ஆபத்துகள் குறித்து சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு பலமுறை எச்சரித்து உள்ளது.

பெரும்பாலும் எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோர், வேலை தேடி சவுதி அரேபியா அல்லது பிற வளைகுடா நாடுகளுக்கு செல்ல முயன்று கடலை கடக்க முயற்சி செய்யும் போது விபத்து நிகழ்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles