200 வருடங்களாக மலையக மக்கள் வஞ்சிப்பு: அவர்களுக்கு நிச்சயம் நீதி கிட்டும்!

” மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளனர். 200 வருடங்களாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அனைத்து வழிகளிலும் மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், கடந்த காலங்களில் வடக்குக்கு எதிராக அநீதிகளே கட்டவிழ்த்துவிடப்பட்டன. அதனால்தான் போர்கூட ஏற்பட்டது. எனினும், வடக்கை கட்டியெழுப்புவதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘ இந்நாட்டில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தனது கடமையை செய்ய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இதில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கிலேயே சில எதிரணி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.”
எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘ இலங்கையில் வறுமையால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு மாகாணம் மாறியுள்ளது. இம்மாகாணத்தை நாம் நிச்சயம் கட்டியெழுப்ப வேண்டும். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும், வடக்கை நோக்கியே அனைத்து அநீதிகளையும் கட்டவிழ்த்துவிட்டன. வன்முறைகள் தலைவிரித்தாடின. இறுதியில் அது யுத்தமாக மாறியது. மக்கள் கொல்லப்பட்டனர். சொத்து இழப்புகள் ஏற்பட்டன.

போர் முடிவடைந்தும் வடக்கு மாகாணம் கட்டியெழுப்படவில்லை. எனினும், எமது ஆட்சியின்கீழ் வடக்கை நோக்கி அனைத்து செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் வடக்கு மாகாணம் நிச்சயம் கட்டியெழுப்படும்.” – என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles