கிரிக்கெட் சமர்: ஒப்பந்தம் கைச்சாத்து!

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்­கு இடையிலான உத்தியோகபூர்வ கடினப்பந்து கிரிக்கெட் சமருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் விழா அண்­மையில் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையில், பழைய மாணவர் சங்க செயலாளர், உப செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உப செயலாளர், விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், மேலும் இரு அணிகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஒப்பந்தத்தின் படி, உத்தியோகபூர்வ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாவலப்பிட்டி ஜெயதிலக்க விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இரண்டு பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுக்கிடையிலும் சிறப்பு கிரிக்கெட் போட்டி நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.

Related Articles

Latest Articles