சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்காத 50 பஸ்களின் வீதி போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன என்று போக்குவரத்துத் துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
” இலங்கை போக்குவரத்து சபை சுகாதார நடைமுறை – விதிமுறைகளை உரியமுறையில் கடைபிடிக்கின்றது. எனினும் தனியார் துறையினர் 90 சதவீதமானோர் மாத்திரமே இந்த நடைமுறையை பின்பற்றுகின்றனர்.
இந்தநிலையில், விதிமுறைகளை பின்பற்றாத 50 க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களின் அனுமதிப்பத்திரங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். என்றோ ஒருநாள் கொவிட் தொற்று இந்த உலகை விட்டு நீங்கிய பின்னர்தான் அவர்களின் அனுமதிப் பத்திரங்கள் மீண்டும் வழங்கப்படும்.” – என்றார்.
