பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு என்பன வழமைக்கு திரும்பும்வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
2026 ஆம் ஆண்டில் 5-13 ஆம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாறாமல் இருக்கும்.
அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் பருவத்திற்கு ஜனவரி 5 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடவேளைக்காக 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆகும்.
– கல்வி சீர்திருத்த செயல்முறை 2026 ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 க்கு செயல்படுத்தப்படும்.
– கல்வி சீர்திருத்த செயல்முறையின் கீழ், தரம் 6 கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21, 2026 அன்று முறையாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
– 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடைபெற உள்ளது.











